Monday 20 December 2010

பட்டு வண்ணச் சேலைக்காரி…

ரஜினிகாந்த், அம்பிகா-ராதா சகோதரிகளுடன் சேர்ந்து நடித்த ”எங்கேயோ கேட்ட குரல்” என்ற நல்லதொரு படத்திலிருந்து இந்த பாட்டு.  கிராமத்துக் காட்சிகளுடன் அம்பிகாவின் நிழலான தோற்றம் தெரிய அவரைப் பார்த்து பாடுவது போன்ற பாடல் – ரஜினியின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  இசை – இளையராஜா.  குரல் – மலேசியா வாசுதேவன்.  ரஜினியின் மாறுபட்ட படங்களில் ஒன்று – பட்டு வண்ணச் சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரலாய்.    





பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி.. ஹோய்.
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…

பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…

பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு...

பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
     பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெய்யில் பழகும்
     மேனி கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா…
பட்டு வண்ணச் சேலைக்காரி…

காலம் கனிந்து வளரும் உறவு
     மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
     வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் தந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா…

பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…



8 comments:

  1. மனதில் அடிக்கடி பட்டுத் தெறிக்கிற பாடல்!

    ReplyDelete
  2. நல்லபாடல். இப்போதைய பாடல் வரிகளைவிட ம்யூசிக் சப்தத்தில் வார்தைகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை

    ReplyDelete
  3. @@ கே.பி.ஜனா: என்னுடைய இந்த வலைப்பூவில் உங்களது கருத்து! மிக்க மகிழ்ச்சி.

    @@ லக்ஷ்மி: நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா. பழைய பாடல்களில் இசை என்பது பின்னணியில் இருக்க பாடலை ரசிக்க முடிந்தது. இப்போதைய பாடல்களிலோ :(((( பாடலை ரசிக்க முடிவதில்லை.

    ReplyDelete
  4. பாடல் வரிகளை ரசிக்க வைப்பதை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெரும். இப்பொழுது வெற்று சப்தங்களின் காலம்

    ReplyDelete
  5. @@ LK: உண்மை தான் கார்த்திக். பாடலின் வரிகளை விட சப்தமே பெரிதாகிவிட்டது இப்போது. பெரும்பாலான தற்போதைய பாடல்களின் வரிகளே புரிவதில்லை இப்போது. நன்றி.

    ReplyDelete
  6. பாடலையும் கொடுப்பதுதான் இந்தப் பகுதியின் சிறப்பு.

    ReplyDelete
  7. Nice song, Film was also fantastic. Daring theme in that period

    ReplyDelete
  8. @@ ரிஷபன்: மிக்க நன்றி சார். ஒரு சிறு முயற்சி.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    @@ மோகன் குமார்: நான் மிகவும் ரசித்த ரஜினி படங்களில் ஒன்று. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete