Wednesday 9 March 2011

பாட்டு ஒண்ணு பாடு தம்பி…

படம்: வறுமையின் நிறம் சிவப்பு
பாடகர்: எஸ்.பி.பி.
நடிகர்கள்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
படம் வெளிவந்த வருடம்: 1980.

விசில் ஒலியில் ஆரம்பிக்கும் இந்த பாடல், நல்ல இசையோடு பயணித்து இந்தியாவின் பெருகும் மக்கள்தொகையையும் அதனால் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் அழகாய்ச் சொல்லிப் போகும். கண்ணதாசன் அவர்களுக்கு பாட்டு எழுதச் சொல்லித் தரவா வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி அழகாய் சொல்லி இருப்பார் இந்த பாடலில். நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்கள் ரசனைக்காய்….

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…..
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

வந்தாரை வாழவச்சி அ.. சொந்தங்களை ஏங்கவச்சி
பூமி எங்கும் பேரெடுத்தோமே… தம்பியோ…..
ஊர் முழுதும் புத்தி சொன்னோமே.ஆஆஆஆ…
பட்டணத்து வீதியிலே பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா சுத்தி சுத்தி வராரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம்தான்னு சொல்லுங்கப்பா

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

வற்றாத கங்கையென்றும் வாகான பொன்னியென்றும்
கத்தாத ஆளில்லையப்பா ஆனாலும் கத்தாழை வெளையுதேயப்பா...
நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே
நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா…ஆ….
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா
கங்கையிலே முழுகிவிட்டு காவிகட்டி போவோமப்பா….

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

ஊரெல்லாம் பிள்ளையப்பா உள்வீடு நிறையுதப்பா
கூரையிலும் பொங்குதே யப்பா….
இனிமேல் கூப்பிடவே பேரில்லையப்பா
பள்ளியிலே இடமுமில்லே படிச்சி வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியப்போட்டு அடிவயித்தை தடவுங்கப்பா!

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

10 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல படம். நல்ல பாட்டு. இதைவிட எனக்கு மிகவும் பிடித்த அதே படத்துப்பாட்டு லலலாலலலாலால்லா......சபாஷ்
    தங்கத்தட்டு ....... எனக்கு மட்டும்.

    பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    [என் பெயர் காரணம் இப்போது வெளியிட்டுள்ளேன்]

    ReplyDelete
  4. நல்ல பாடல்,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. எனக்கும் பிடித்த பாடல்...

    ReplyDelete
  6. சத்யா படத்திலும் போட்டா படியுது என்ற பாடல் இந்த சீக்வேன்சை ஒத்து இருக்கும்.

    ReplyDelete
  7. கண்ணதாசன் வரிகளுக்கு கேட்கவா வேண்டும்.நல்ல பாடல்.
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட சகோதரர் எல்.கே, லக்ஷ்மிம்மா, வை.கோபாலகிருஷ்ணன் சார், சகோ ஆசியா உமர், டக்கால்டி, ராஜி உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. சிறந்த பாடல்,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. @thirumathi bs Sridhar,

    நன்றிங்க.

    ReplyDelete