Tuesday 6 March 2012

கனாக் காணும் கண்கள் மெல்ல....


1982 ம் வருடத்தில் வெளிவந்த ”அக்னி சாட்சி” என்ற படத்தில் வந்த இந்த பாடல் மிகவும் இனிமையான பாடல். வாலி அவர்களின் வரிகளிலும், எஸ்.பி.பி அவர்களின் குரலிலும் இன்னும் இனிமை கூடுகிறது. எனக்கு பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – அக்னி சாட்சி
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் – கவிஞர் வாலி
படம் வெளிவந்த வருடம் – 1982
நடித்தவர்கள் – சிவக்குமார், சரிதா




கனாக் காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே 
உலாப் போகும் நேரம் கண்ணே  

கனாக் காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப் போகும் நேரம் கண்ணே 
உலாப் போகும் நேரம் கண்ணே 

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ

நொடியில்  நாள்தோறும் நிறம் மாறும் தேவி 
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட 
நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே 


நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்

உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல்  திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன்

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல 



புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப் போகும் நேரம் கண்ணே 


8 comments:

  1. அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நிலாக்கால மேகம் எல்லாம்
    உலாப் போகும் நேரம் கண்ணே

    அருமையான வரிகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. வழக்கம்போல நல்லபாடல்பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. இந்த பாடலை ரசித்து கருத்திட்ட,

    வை.கோபாலகிருஷ்ணன் சார்
    இராஜராஜேஸ்வரி மேடம்
    லஷ்மிம்மா

    அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்

    ReplyDelete
  6. Jewel in the crown for Saritha

    ReplyDelete
  7. ராஜபாட்டை ராஜா
    sunnyside

    இருவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete